Skip to main content
New!

Vaṇṇa mukaṅkaḷ

வண்ண முகங்கள்Viṭṭalrāv, 1942-விட்டல்ராவ், 1942-2024
Book
"கர்னாடகாவில் கோலோச்சியிருந்த நாடக கம்பெனிகளில் பணியாற்றும் மனிதர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகள். ஒழுங்கான தயாரிப்பும் சரியான விநியோகமும் இல்லாததால் வாசகர்கள் கவனத்துக்கு வராமலே போய்விட்ட ஒரு மாத நாவலைப் பல ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக நான் படிக்க நேர்ந்தது. விட்டல் ராவ் எழுதிய 'மூங்கில் முளை' என்ற அந்த மெலிதான புத்தகம் என்னை சற்று ஆச்சரியப்படுத்தியது. மனித உறவுகள் பற்றிக் கதைகள் எழுதுவதிலும் திரைப்படங்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுவதிலும் நவீன ஓவியங்களைப் படைப்பதிலும் ஈடுபாடுள்ளவராக நான் அறிந்திருந்த விட்டல் ராவ் நாடகத்துறை பற்றியும் கொண்டிருந்த ஆர்வத்தையும் பரிச்சயத்தையும் அந்த நாவல் எனக்குத் தெரியப்படுத்தியது. பெரிய 'கேன்வாசில் தீட்டத் திட்டமிட்டிருந்ததைக் குறுக்கி எழுத நேர்ந்த சங்கடம் பற்றிப் பின்னர் அவரோடு பேசிய வேளையில் தெரிவித்தார். அதனாலென்ன, விரிவாக மறுபடியும் எழுதுங்களேன் என்று அவருடன் பேச நேர்ந்த தருணங்களிலெல்லாம் தவறாது சொல்லிக் கொண்டிருந்தவன் என்ற தகுதியால்தான் இப்போது முன்னுரை எழுதும் வாய்ப்பை நான் அடைந்திருப்பதாகத் தோன்றுகிறது. வரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகள் பற்றியோ, குறிப்பிட்ட துறைகளின் நிலை குறித்தோ, மனித வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்தும் சமூக நிகழ்வுகள் பற்றியோ தமிழில் இலக்கியப் பதிவுகளைச் செய்தவர்கள் குறைவு. காந்தியப் போராட்டம் பற்றியும் 1947க்கு முந்தைய விடுதலைப் போராட்டம் பற்றியும் பல நாவல்கள் வெளிவந்துள்ளபோதும் அவை சித்தாந்தங்களை விளக்குகிறவையாக அமைந்ததே அதிகம். அந்த காலகட்டத்தின் அசல் நிகழ்ச்சிகளுடன் இணைந்த இலக்கிய வெளிப்பாடுகள் குறைவு. அசோகமித்திரன் (திரையுலக வாழ்க்கை, பிரிவினை, இணைப்பு காலகட்டம் பற்றியும்), அறந்தை நாராயணன் (திரையுலகம் பற்றியும்), கொத்தமங்கலம் சுப்பு (சதிர்,பரதநாட்டியச் சூழல் பற்றியும்), ராஜம் கிருஷ்ணன் (உப்பளத் தொழிலாளர், குழந்தைத் தொழிலாளர், பெண் சிசுக்கொலை முதலானவை பற்றியும்), கி. ராஜநாராயணன் மற்றும் செ. யோகநாதன் போன்ற சிலர் (புலம்பெயர்ந்தோர் குறித்தும்), நானறிந்த அளவில் இலக்கியப் பதிவுகளைச் செய்திருக்கிறார்கள். விடுதலைக்கு முன்பும் பின்புமான நீண்டகால வரலாற்றுப் பின்னணியுடன் பொன்னீலன் எழுதியிருப்பது இந்த வரிசையில் சமீப வரவு. இங்கு குறிக்கப்பட்ட படைப்பாளிகள் ஒவ்வொருவரும் அவரவர் தேர்வு செய்துகொண்ட வெவ்வேறு அணுகுமுறைகளைப் பின் பற்றி வருபவர்கள் என்பதும் அதனால் மாறுபட்ட இலக்கியத் தர நிர்ணயங்களுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிக்கத்தக்கது. தமிழ் வாழ்வில் நீண்ட பாரம்பரியம் உடைய கூத்தர்களின் வாழ்க்கை பற்றியோ, கூத்தின் அடி யொற்றி வந்து விலகிச் சென்ற சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக வடிவத்தைப் பல்லாண்டுகள் நிகழ்த்தி வந்த ஏராளமான நாடகக் குழுக்களின் ஜீவிதம் பற்றியோ, நானறிந்த மட்டில், தமிழில் யாரும் இலக்கியப் பதிவுகள் செய்ததாகத் தெரியவில்லை. சினிமாவின் வருகையும், அரசியல் பொருளாதார மாற்றங்களும் இவற்றின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் அறிஞர்களின் ஆய்வுக்கும் இலக்கியவாதியின் ஆய்வு மீறிய மானுட அக்கறைக்கும் உரியவை"-- Amazon.com.
Main title:
Vaṇṇa mukaṅkaḷ / Viṭṭal Rāv.வண்ண முகங்கள் / விட்டல் ராவ்.
Edition:
First edition.
Publication Details:
Bangalore : Jairigi, 2024.
Variant title:
Title on title verso: Vanna mukankal
ISBN:
97881962001388196200137
Language:
Tamil
Added title:
Clear current selections
items currently selected
View my active saved list
24065 items in my active saved list